தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புரட்சிகர சிந்தனைகள் நூலகங்களில் இருந்தே உருவாயின! - இந்திய நூலக மாநாட்டில் என்.ராம் உரை

17 Feb 2026, 3:36 pm
புரட்சிகர சிந்தனைகள் நூலகங்களில் இருந்தே உருவாயின! - இந்திய நூலக மாநாட்டில் என்.ராம் உரை
<p><strong>புரட்சிகர சிந்தனைகள் நூலகங்களில் இருந்தே உருவாயின!</strong></p> <p>மனித நாகரிகத்தின் பாதையை மாற்றிய புரட்சிகர சிந்தனைகள் அனைத்தும் நூலகங்களின் அறிவு வளங்களிலிருந்தே உருவாயின என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்தார். இந்திய நூலக காங்கிரஸின் நான்காவது மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திங்களன்று தொடங்கியது. நாடு முழுவதிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் பங்கேற்றுள்ள இந்த இருநாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து என்.ராம் பேசியதாவது: பன்மைத்துவத்தின் அடையாளம் நூலகங்கள் &ldquo;இந்திய அரசியலமைப்பின் சமத்துவம், கல்வி மற்றும் பன்முகப் பண்பாடு ஆகிய அடிப்படை களை இந்திய நூலக காங்கிரஸ் தன்னுள் கொண்டுள்ளது. தில்லியில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மையாக மாற்ற முயலும் எதேச்சதிகாரப் போக்குகளையும், ஜனநா யகத்தை ஒடுக்கும் அரசியல் திட்டங்களையும் இந்த இயக்கம் மறுக்கிறது. அறிவுப் பரவலின் மூலம் ஜனநாயகத்தை &nbsp;வலுப்படுத்துவதே இதன் நோக்கம். பொதுநூலகங்கள் சமூக நீதிக்கான கருவிகளாகச் செயல்பட வேண்டும். உதாரணமாக, கேரளாவின் கண்ணூர் மாவட்டத் தில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த நூலகங்களை விட அதிகமாக உள்ளது. இதுவே அந்தந்த மாநிலங்களின் ஜனநாயக நிலையைப் பறைசாற்றுகிறது. &nbsp;மார்க்ஸ் - லெனின் காட்டிய வழி காரல் மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் வாசிப்பு மண்டபத்தில் கழித்தார். அவரது &lsquo;மூல தனம்&rsquo; உள்ளிட்ட படைப்புகள் நூலக ஆய்வுகளின் விளைவே. இதனை முன்வைத்தே, கன்னிமாரா நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலையை நிறுவ வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை யை ஏற்றுத் தமிழக அரசு அங்கே சிலையை நிறுவி யுள்ளது. லெனின் போன்ற மாபெரும் தலைவர் களும் நூலகங்களில் பெரும் நேரத்தைச் செல விட்டவர்களே. அத்தகைய முன்னேற்றத்திற்கு கருவியாக விளங்கும் நூலகங்களை வலுப் படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம்&rdquo; என்றார். நூலகங்கள் அறிவின் சேமிப்பகம் &nbsp;மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய சிவதாசன் எம்.பி. பேசுகையில், &ldquo;ஒரு நாட்டின் வளர்ச்சி நூல கங்களில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இந்தி யாவில் தேசிய நூலக இயக்கத்திற்கான ஒதுக்கீடு ரூ. 3 கோடிக்கும் குறைவாகவே உள்ளது. நூல கம் என்பது வெறும் புத்தகங்களை அடுக்கி வைக்கும் இடமல்ல; அது சாதி, மதம், வர்க்க எல்லைகளைத் தாண்டி மனிதர்கள் சமமாக அமரக்கூடிய இடம். சமூகப் பிரிவினைகள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் குடிமக்களாக ஒன்றுசேர வேண்டிய பொது இடம் நூலகம் மட்டுமே&rdquo; என்றார். &nbsp;ஒடுக்கப்பட்டோரின் அறிவுப்பசி அறிமுகவுரையாற்றிய ஹனுமந்தையா, &ldquo;இந்தியாவில் சுமார் 30 கோடி மக்கள் எழுத்த றிவின்றி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் தலித், ஆதிவாசி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள். இவர்கள் அறிவைப் பெறும் வாய்ப்பினை உரு வாக்கித் தர ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் தேவை. மனிதர்களுக்கு இடையே உள்ள கண்ணுக்குப் புலப்படாத சுவர்களை உடைப்பதே இந்த இயக்கத்தின் குறிக்கோள்&rdquo; என்றார். கிரிராஜன் எம்.பி. பேசுகையில், &ldquo;தமிழகத்தில் திராவிட இயக்கமும், கேரளாவில் கம்யூனிச இயக்கமும் நூலகங்கள் வாயிலாக எழுத்த றிவை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முன்னு தாரணமாக விளங்குகின்றன&rdquo; எனக் குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.