வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக்கூட்டம்
10 Jan 2026, 2:48 pm
<p><strong>வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக்கூட்டம்</strong></p>
<p>பெரம்பலூர், ஜன.10- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களின் செயல்பாடுகள் குறித்து, வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு பார்வையாளர் நீரஜ்கார்வால் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜன.1-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 இல் பெறப்படும் மனுக்கள் தொடர்பாகவும், முகாம்கள் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது தொடர்பாகவும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கேட்டறிந்தார். முகாம்களில் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரப்பெற்ற படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் தீர்வு காணப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தும், பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கினார்.</p>
