காலமுறை ஊதியம் கோரி வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>காலமுறை ஊதியம் கோரி வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், கிராம நிர்வாக அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.</p>
