வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டம்</strong></p>
<p>சேலம், பிப்.20- வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தமிழ்நாடு வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வரு வாய் கிராம ஊழியர் சங்கத்தினர் வெள்ளியன்று சேலம் மாவட் டம், அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தெற்கு வட்டத் தலைவர் கபில்குமார் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், வட்ட செயலாளர் உமாராணி, தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தநாரி ஆகிளோர் சிறப்புரையாற்றினார். இதில், ஏராள மான வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் பங்கேற்ற னர். இதேபோன்று, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் இச்சங்கத்தின் சார்பில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போராட்டத் திற்கு, மாநிலச் செயலாளர் அப்துல் மஜீத் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் சகாயநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுரேஷ்பாபு கோரிக்கை விளக்க உரை யாற்றினார். வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வாழ்த்திப் பேசி னார். இப்போராட்டத்தில் ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.</p>
