முந்தய பக்கம்

தீக்கதிர் செய்தி எதிரொலி நியாய விலை கடையில் வருவாய் ஆய்வாளர் ஆய்வு

2 hours before
தீக்கதிர் செய்தி எதிரொலி நியாய விலை கடையில்  வருவாய் ஆய்வாளர் ஆய்வு

தீக்கதிர் செய்தி எதிரொலி நியாய விலை கடையில் வருவாய் ஆய்வாளர் ஆய்வு

சங்கராபுரம், அக்.14-கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் பிஓ எஸ் இயந்திரம் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு அத்தியா வசிய பொருட்கள் முறையாக வழங்கப்பட வில்லை என்றும், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவதாகவும் தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இதன் எதிரொலியாக, மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) இன்று கீழப்பட்டு நியாய விலை கடையில் ஆய்வு நடத்தினார்.

கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள், விற்பனை பதிவேடுகள், பிஓஎஸ் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பொருட்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram