முந்தய பக்கம்

8698 மாணவர்களுக்கு மடிக்கணினி வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார்

7 Jan 2026, 4:05 pm
8698 மாணவர்களுக்கு மடிக்கணினி வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார்
<p><strong>8698 மாணவர்களுக்கு மடிக்கணினி வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார்</strong></p> <p>விருதுநகர், ஜன.7- உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், 8,698 கல்லூரி மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் வழங்கினார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா &nbsp;தலைமையேற்றார். சட்டமன்ற உறுப்பி னர்கள் சீனிவாசன்( விருதுநகர்), ஜி.அசோ கன்( சிவகாசி), தங்கபாண்டியன் (இராஜ பாளையம்), சிறுபான்மையின நலவாரிய துணைத்தலைவர் இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp;மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வீ.கேச வதாசன், நகர்மன்றத் தலைவர் மாதவன், நேர்முக உதவியாளர்(பொது) பிர்தௌஸ் பாத்திமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram