வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு
10 Feb 2026, 4:50 pm
<p><strong>வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு</strong></p>
<p> ராணிப்பேட்டை, பிப். 10 – கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் - டி கிரேட் அடிப்படை ஊதியம் ரூ. 15,700 வழங்க வேண்டும். சிபிஎஸ் அரசின் பங்கீடு தொகையுடன் வழங்க வேண்டும் என கோரி வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று (பிப். 10) மாவட்டத் தலைவர் ஜி. கபீர்தாஸ் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி. லோகநாதன், மாநில அமைப்பு செயலாளர் வி. மணிவண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மு. மாநில செயலாளர் கே. ரவி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ராஜி, பி. சதீஷ்குமார், ஆர். விஜயகுமார், டி. விநாயகம், என். ஞான உதயம் நன்றி கூறினார்.</p>
