முந்தய பக்கம்

பணிப்பாதுகாப்புச் சட்டம் கோரி நெல்லையில் வருவாய்த்துறையினர் மறியல் - கைது

4 Mar 2026, 5:01 pm
பணிப்பாதுகாப்புச் சட்டம் கோரி நெல்லையில் வருவாய்த்துறையினர் மறியல் - கைது
<p><strong>பணிப்பாதுகாப்புச் சட்டம் கோரி நெல்லையில் வருவாய்த்துறையினர் மறியல் - கைது&#39;</strong></p> <p>திருநெல்வேலி, மார்ச் 4- வருவாய்த்துறையினருக்கு சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அனைத்து நிலை அலு வலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் கடந்த 24 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நெல்லையில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வருவாய்த் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் புதன்கிழமையன்று வண்ணார்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்திற்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுப்பு மு.தலை மை தாங்கினார். மாவட்ட செயலா ளர் மாரிராஜா முன்னிலை &nbsp;வகித்தார். இதில் 45 பெண்கள் உள்ள 130 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, திசையன்விளை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன் மகாதேவி உள்ளிட்ட 7 தாலுகா அலு வலகங்களில் பணிபுரியும் 1050-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை 10 நாட்களாக புறக்கணித்ததால் அலு வலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram