எஸ்ஐஆர் பணிக்கான மதிப்பூதியம் கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
29 Oct 2026, 10:30 pm
<p><strong>எஸ்ஐஆர் பணிக்கான மதிப்பூதியம் கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி,அக்.29-2026 - தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மதிப்பூதியம் வழங்கிட வேண்டும்.எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்கிட வேண்டும் .தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் நியாயமான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.சுப்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏசுராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தோழமைச்சங்க நிர்வாகிகள் வீ.பார்த்தசாரதி, ஸ்டான்லி, ராஜேஸ்வரி, செல்வகுமார், மகாராஜன் ஆகியோர் ஆதரித்து பேசினர்.சங்க மாநில செயலாளர் செ.மாரி ராஜா நிறைவுரையாற்றினார் .மாவட்ட பொருளாளர் கந்தசாமி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
