வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>சிவகங்கை, பிப்.25- சிவகங்கை மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவ லர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி செவ்வாயன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழி யர்கள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலு வலர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும், பணியின் தன்மை மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதி யம் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டன. கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் வரை போராட் டம் தொடரும் என சங்க நிர் வாகிகள் தெரிவித்தனர்.</p>
