தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த்துறை

5 Feb 2026, 3:40 pm
 ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த்துறை
<p><strong>&nbsp;ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த்துறை</strong></p> <p>ஈரோடு, பிப்.5- பட்டியலின மக்கள் குடியிருப் பில் தெருவிளக்கு அமைக்க நிலம் &nbsp;அளவீடு செய்து அத்துக்காட்டியும், &nbsp;ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலை யில் அந்தியூர் வருவாய்த்துறை வட்டாட்சியரிடம் வியாழனன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் &nbsp;வட்டம், நகலூர் கிராமத்திற்குட் பட்ட குண்டுமூப்பனூர் பகுதியில், &nbsp;80 பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியி ருப்பின் கிழக்கு பகுதியில் கான் கிரீட் வீதி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தெருவிளக்கு வசதி செய்ய ஊராட்சி மன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு, 3 மின் &nbsp;கம்பங்கள் நடப்பட்டன. இவ்வாறு &nbsp;நடப்பட்ட மின் கம்பங்கள் தனது &nbsp;விவசாய பூமியில் நடப்பட்டதாகக் கூறி, அதன் உரிமையாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி யுமான கே.கே.முத்துசாமி என்பவர் &nbsp;பிடுங்கி எரிந்து விட்டார். இதனை யடுத்து வருவாய்த்துறையின் மூலம் நில அளவை செய்யப்பட் டது. அதன் மூலம் மின் கம்பங்கள் &nbsp;நடப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமா னது என்பது உறுதி செய்யப்பட்டது. &nbsp;மேலும், அளவீட்டின் படி அத்துக் கற்களும் நடப்பட்டது. ஆனால், &nbsp;பணபலம் மற்றும் அதிகார பலம் &nbsp;மிக்க முத்துசாமி, அத்துக்கற்களை யும் உடைந்தெறிந்தார். அப்போது &nbsp;தட்டிக்கேட்ட அப்பகுதி பெண் களை சாதியைச் சொல்லி திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்த காவல் &nbsp;துறையில் செய்யப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதியாமல் விடப் பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் வரு வாய்த்துறையினர் நில அளவை செய்து, முத்துசாமியின் ஆக்கி ரமிப்பை உறுதி செய்தனர். இவை &nbsp;அனைத்தும் நடந்து 6 மாதங்க ளுக்கு மேலாகியும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. மின் கம்பங் கள் நடப்படவில்லை. எனவே ஆக் கிரமிப்பை அகற்றி மின்கம்பங் களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தியூர் வட்டாட்சியரிடம் வியாழனன்று ஊர் கொத்துக்காரர் குமார் தலை மையில் அப்பகுதி மக்கள் மனு &nbsp;கொடுத்தனர். தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனி சாமி, பொருளாளர் மா.அண்ணா துரை, நிர்வாகிகள் ஜி.பழனிசாமி, பி.முருகன், கிருஷ்ணமூர்த்தி, கலைவாணி, காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடை பயணம் மேற்கொள்ளவும் திட்ட மிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.