தேனியில் வருவாய்துறை கூட்டமைப்பு மறியல்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>தேனியில் வருவாய்துறை கூட்டமைப்பு மறியல்</strong></p>
<p>தேனி, பிப்.10- வருவாய்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர் களின் உயிர் மற்றும் உடை மைகளை பாதுகாக்கும் நோக்கில் “சிறப்பு பணி பாது காப்பு சட்டம்” இயற்ற வேண் டும் உள்ளிட்ட 9 அம்ச கோரி க்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வரு வாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மறியல் போராட் டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தேனி–மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மறி யல் போராட்டத்திற்கு கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் கு.ராமலிங்கம் தலைமை வகித்தார். நாகராஜன் (அரசு ஊழியர் சங்கம்), ஆர்.வேல் முருகன் (வருவாய்துறை), அழகர்சாமி (கிராம உதவி யாளர் சங்கம்), வேல்முரு கன் (நில அளவைத் துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியலில் ஈடு பட்ட 78 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல், தேனி மாவட்டத்தில் வருவாய்துறை சார்ந்த 185 ஊழியர்கள் வேலை நிறுத் தப் போராட்டத்தில் பங்கேற் றனர்.</p>
