கடலூரில் வருவாய்த்துறை ஊழியர்கள் மறியல்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>கடலூரில் வருவாய்த்துறை ஊழியர்கள் மறியல்</strong></p>
<p>சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் மற்றும் நில அளவைத்துறையினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்குத் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, மாவட்டச் செயலாளர். விஸ்வநாதன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் தினகரன், நில அளவையர் சங்க மாவட்டச் செயலாளர் நீல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 350 பேரைப் போலீசார் கைது செய்தனர்.</p>
<p> </p>
