வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் மறியல்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் மறியல்</strong></p>
<p>கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் வட்ட செயலாளர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட பொருளாளர் பிரதாப், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.வேல்முருகன், வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கு ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.</p>
<p> </p>
