தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

1 hour before
விளையாட்டு

விளையாட்டு

ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் (38) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கான அவரது 14 ஆண்டுகால மூன்று வடிவக் கிரிக்கெட் பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.

வலதுகை பேட்டிங், வலது கை சுழற்பந்துவீச்சாளரான மேக்ஸ்வெ ல்லின் சர்வதேச கிரிக்கெட் பயணம் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்றுஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பரில் துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டி-20 போட்டியில் விளையாடிய அவர், 2013ஆம் ஆண்டு மார்ச்சில் ஹைதராபாத்தில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்தொப்பியைப் பெற்றார் (முதல் டெஸ்ட்போட்டிக்கு வழங்கும் கவுரவம்).

3 உலகக்கோப்பை

பேட்டிங்கில் அதிரடி, பகுதிநேர பந்துவீச்சு, சூப்பர் பீல்டிங் என அனைத்திலும் திறமைவாய்ந்த மேக்ஸ்வெல் 7டெஸ்ட்கள், 149 ஒருநாள் மற்றும் 130 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள்போட்டிகளில் 3,990 ரன்களையும், டி-20போட்டிகளில் 2,897 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 339 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.கிரிக்கெட் வாழ்க்கையில் 2015 மற்றும்2023இல் 2 ஒருநாள் உலகக்கோப்பை யை வென்றுள்ளார். அதே போல 2021இல் டி-20 உலகக்கோப்பை அணியிலும் விளையாடியுள்ளார்.

மறக்க முடியுமா?

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் விளையாடிய அந்த அசாதாரண இன்னிங்ஸ்தான் அவரது வாழ்க்கையை வரையறுக்கும் ஆட்டமாக அமைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் நிர்ணயம் செய்த 292 ரன்களை நோக்கி ஆஸ்திரேலியா பயணித்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் அசத்தலான பந்துவீச்சால் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா திணறியது. கடுமையான தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு, நடக்க முடியாமல் தவித்தமேக்ஸ்வெல் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலியா வை வெற்றிப் பெற வைத்தார். இந்த வெற்றி மேக்ஸ்வெல்லுக்கு மட்டு மின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிபயங்கர சம்பவமாக இன்றுவரை நினைவுக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் மருமகன்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைப் (ஐபிஎல் - சென்னை ரசிகர்களின் ஆரவாரம்) போன்று கிளென் மேக்ஸ்வெலும் “தமிழ்நாட்டின் மருமகன்” என அழைக்கப்படுகிறார். காரணம் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட வினி ராமன் (ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார் - சென்னையைச் சேர்ந்தவர்) என்பவரைத் திருமணம் செய்துகொண்டதால்தான். 2022ஆம் ஆண்டு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் ஆகியோரின் திருமணம் இந்து தமிழ் பாரம்பரிய வழக்கப்படி நடைபெற்றது.மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக் கெட்டிலிருந்து விலகினாலும், அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடக்கம்

இந்தியா - நியூஸிலாந்துஇடம் : ஈடன் பார்க், ஆக்லாந்துநேரம் : காலை 7:30 மணி (இந்திய நேரம்)சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)

டி-20, ஒருநாள், டெஸ்ட் என

மூன்று விதமான போட்டி களைக் கொண்ட தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் புதனன்று தொடங்குகிறது.முதல் போட்டி ஆக்லாந்தில் புதனன்று காலை நடைபெறுகிறது.

டி-20 தொடரைப் போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், டி-20 தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூஸிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீதேகுறியாக களமிறங்குவதால், 5 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் ஒவ்வொரு ஆட்டமும்பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.