2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வுபெற்ற போக்குவரத்துத்
28 Feb 2026, 2:29 pm
<p>2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, பணிக்கொடை மற்றும் விடுப்பு ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், தொமுச தலைவர் கி.நடராசன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
