ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட போராட்டத்திற்கு வெற்றி
19 Feb 2026, 3:09 pm

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட போராட்டத்திற்கு வெற்றி

சிஐடியு வரவேற்பு

சென்னை, பிப். 19 - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் கழகங் களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலா ளர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன் களை வழங்க தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளதை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. இதுகுறித்துச் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செய லாளர் கே. ஆறுமுக நயினார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 15 ஆண்டுகால இழுபறியும் அடிப்படை காரணமும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பணி ஓய்வுபெற்ற 30 நாட்களுக்குள் அவர் களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை மற்றும் விடுப்புச் சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது சட்டப்படியான விதியாகும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இப்பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறைக்குத் தேவை யான தொகையை அரசு முறையாக வழங்காத நிலையில், தொழிலாளர்களின் சேமிப்புப் பணத்தை நிர்வாகங்கள் அன்றாடச் செலவு களுக்குப் பயன்படுத்தியதே இந்தப் பிரச்சனை இவ்வளவு காலம் நீடித்ததற்கு அதிமுக்கி யத்துவம் வாய்ந்த காரணமாகும். 62 நாட்கள் நீடித்த உறுதியான போராட்டம் ஓய்வுபெற்ற உடனே பணப்பலன்களை வழங்கக் கோரி சிஐடியு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு இணைந்து தொடர்ச்சி யான போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025 ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 17 வரை 62 நாட்கள் இடைவிடாத காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் தீவி ரத்தை உணர்ந்து, அக்டோபர் 17 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்கு வரத்துத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொங்கலுக்கு முன்பாக அனைத்துப் பணப் பலன்களும் வழங்கப்படும் எனத் தரப்பட்ட வாக்குறுதி, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறை வேற்றப்படவில்லை. அரசின் துரித நடவடிக்கை மற்றும் அரசாணை வாக்குறுதி தள்ளிப்போன சூழலில், சம்மேளன நிர்வாகிகள் மீண்டும் அமைச்சரை யும் துறைச் செயலாளரையும் நேரில் சந்தித்து முறையிட்டனர். நிதித்துறையின் பரிசீலனை யில் இருந்த கோப்பு விரைவில் அங்கீகரிக்கப் படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, 18.02.2026 அன்று ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வுக்கால பலன்கள் முழுவதையும் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அர சாணையின் சிறப்பம்சமாக, 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 15 ஆண்டு களாக நீடித்த ஒரு பெரும் அவதிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஓய்வுபெறு வோருக்கு உடனடியாகப் பலன்கள் கிடைக்கும் நல்வாய்ப்பு உருவாகியுள்ளது. முதலமைச்சர் மற்றும் தோழர்களுக்கு நன்றி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டு மென முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை உரக்கப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.நாகை மாலி மற்றும் எம். சின்னத்துரை ஆகியோருக்கும் சம்மேளனம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்குச் சிஐடியு சார்பில் நன்றி களைத் தெரிவிப்பதோடு, போராட்டத்திற்குப் பேராதரவு நல்கிய தொழிலாளர்களையும் ஓய்வு பெற்ற ஊழியர்களையும் பாராட்டுகிறோம். நிலுவையில் உள்ள கோரிக்கைகள் இதே உணர்வுடன், ஏற்கெனவே பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி, பணியில் உள்ள தொழிலாளர்களின் ஒப்பந்த நிலுவைத் தொகை மற்றும் இதர கோரிக்கைகளையும் விரைந்து தீர்த்து வைக்க வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரையும் போக்குவரத்து அமைச்சரையும் சிஐடியு கேட்டுக்கொள்கிறது.