தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை

15 Nov 2025, 4:09 pm
 பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை
<p><strong>&nbsp;பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை</strong></p> <p>வேலூர், நவ.15- &nbsp;தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க வேலூர் மாவட்ட மாநாடு வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டு ரங்கன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். தமிழ்நாடு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். நிர்வாகிகள் தேர்வு முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலை வராகவும், ஜி.ஆறுமுகம் செயலாளராகவும், அ.சிவக்குமார் பொருளாளராகவும் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வூதிய தொகுப்பு தொகையை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், காப்பீட்டு திட்ட குளறு படிகளை களைந்து பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறக்கூடிய வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.