கரூரில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநில மாநாடு
24 Jan 2026, 3:38 pm
<p><strong>கரூரில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநில மாநாடு</strong></p>
<p>கரூர், ஜன.24- தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2ஆவது மாநில மாநாடு கரூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டி ற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். எம்.பொன்னையா தேசியக்கொடியை ஏற்றி வைக்க, மாநிலப் பொருளாளர் ப.கிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழுத் தலை வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநிலப் பொருளாள ருமான த.கணேசன் வரவேற்புரை ஆற்றினார். தென்மண்டல இன்சூர ன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். மாநாட்டின் துணைப் பொதுச்செய லாளர் த.மனோகர ஜஸ்டஸ் மாநாட்டு மலரை வெளியிட, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.சங்கர் அதனைப் பெற்றுக்கொண்டார். சங் கத்தின் பொதுச்செயலாளர் த.பர்வத ராஜன் வேலை அறிக்கையை முன் வைத்து உரையாற்றினார். பேராசி ரியர் அருணன் மாநாட்டில் சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலா ளர் பொ.அன்பழகன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செய லாளர் மா.குமரேசன், தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எ.அமலராஜன், மதுரை மூட்டா ஏ.டி. செந்தாமரைக்கண்ணன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஜி.சேகர் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். இதில் கரூர் மாவட்டச் செயலாளர் சி.கோபால், வீ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநிலச் செயலாளர் வெ.லீலாவதி நன்றி கூறினார். இம்மாநாட்டில், 8ஆவது ஊதி யக்குழுவில் ஓய்வூதியர்களுக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகை யில், கடந்த 2025 மார்ச் 25-ம் தேதி ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நள்ளி ரவில் கொண்டு வந்த ஓய்வூதிய மாறு தல் தொடர்பான மசோதாவை (Valida tion Bill) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், நீட்டிக்கப்பட்ட ஓய்வு பெறும் வயதினை மீண்டும் 58 ஆகக் குறைத்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியர்கள் மாதத்தின் இடை யில் மரணமடைந்தாலும் அந்த மாதத் திற்கான முழு ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும் எனவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைக ளை நீக்கி அனைத்து நோய்களுக்கும் பணமில்லாச் சிகிச்சை வழங்க வேண்டும் அல்லது காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 முக்கிய தீர்மா னங்கள் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.</p>
