ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா
14 Feb 2026, 4:33 pm
<p><strong>ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா</strong></p>
<p>சிதம்பரம், பிப்.14- கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே தர்ணா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட நிர்வாகிகள் வை.சிற்றரசன், எம்.கோவிந்தசாமி, டி.கமலக்கண்ணன், கோ.பாலசுப்பிரமணியன், ஏ.பால சுப்பிரமணியம், முகமது நூர்ஹாஜா, எஸ்.காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஓய்வு பெற்றோர் நல சங்கம் மாநில செயலாளர் கோ.பழனி, முன்னாள் மாவட்டத் தலைவர் கே.என்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலை வர் என்.கலியமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். நிறைவில் மாவட்டப் பொருளாளர் க.ஜெயபாலு நன்றி கூறினார். கோரிக்கைகள் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி யளித்தப்படி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதியத்தில் 10 சதவீதம் கூடுதல் வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசு முழுமையாக ஏற்று நடத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.</p>
