விறகு அடுப்பிற்கு மாறிய உணவகங்கள் பொது மக்கள் பாதிப்பு
27 Mar 2026, 3:15 pm
<p><strong>விறகு அடுப்பிற்கு மாறிய உணவகங்கள் பொது மக்கள் பாதிப்பு</strong></p>
<p>திருவள்ளூர், மார்ச் 27- திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவலாக சுற்றுப்புற பகுதியில் சமை யல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காத சூழலைப் பயன்படுத்தி இடைத்தார்கள் கள்ளச்சந்தையில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களில் விதவிதமான உணவுப் பண்டங்களை தயாரிப்பதில்லை. சில குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே தயார் செய்கின்றனா். இட்லி, பொங்கல், பரோட்டா, சப்பாத்தி போன்று ஒரே நேரத்தில் வேகவைக்கும் உணவுப் பொருள்கள்தான் பெரும்பாலான உண வகங்களில் இப்போது விற்பனைக்காக வைக்கப்படுகிறது. இந்நிலையில் எரிவாய்வு சிலிண்டருக்கு மாற்று வழியாகப் பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பு விறகு கரிக்கு ஒரு சில உணவகங்கள் மாறி வருகின்றன. திறந்தவெளி இட வசதியிருக்கும் உணவகங்கள் இந்த நிலைக்கு மாறி வருகின்றன. சில உணவகங்களில் மாற்று இடத்தில் விறகு அடுப்பு வைத்து பிரியாணி போன்ற உணவுகளை சமைத்து வாடிக்கையாளா்களுக்கு விநியோகித்து வருகின்றனா். திறந்தவெளி இட வசதி இல்லாத உணவகங்கள் மின்சார குக்கர் மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p>
