தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காத வணிக சிலிண்டர் மூடப்பட்ட உணவகங்கள்-வெளியூர்வாசிகள் அவதி

1 Apr 2026, 4:02 pm
 அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காத வணிக சிலிண்டர்  மூடப்பட்ட உணவகங்கள்-வெளியூர்வாசிகள் அவதி
<p><strong>&nbsp;அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காத வணிக சிலிண்டர் &nbsp;மூடப்பட்ட உணவகங்கள்-வெளியூர்வாசிகள் அவதி&nbsp;</strong></p> <p>நாகர்கோவில்,ஏப்.1- குமரி மாவட்டத்தில் அதிக விலை கொ டுத்தாலும் வணிக சிலிண்டர் கிடைக்காத தால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இயங்கும் சில உணவகங்களில் விலை அதிகரித்துள்ளது. இதனால் வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும், படிக்கும் வெளியூர்வாசிகள் உணவுக்காக அவதிப்படுகின்றனர். குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வரு கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உணவகங்களை நம்பியே உள்ளனர். அதைப்போல் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் &nbsp;பலர் தங்கி படித்து வருகின்ற னர். இவர்களும் உணவகங்களை நம்பியே உள்ளனர். &nbsp;இந்நிலையில் வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விலை அதிகம் கொடுத்தாலும் வணிக சிலிண்டர் கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று உணவக உரிமையாளர்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். இதனால் பல உண வகங்கள் மூடப்பட்டு விட்டன. ஒரு சில உண வகங்களே இயங்குகின்றன. இங்கும் உண வின் விலை வழக்கத்தை விட அதிக ரித்துள்ளது. இதனால் உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் வெளியூர்வாசி கள், மாணவர்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். பல உணவகங்களில் விறகுக ளைக் &nbsp;கொண்டு உணவு சமைப்பதால் அங்கு புகை மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வணிக சிலிண்டரின் விலை &nbsp; ரூ.203 அதி கரித்து, ரூ.2,246.50 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இந்த திடீர் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர் பெரும் கவலை அடைந்துள்ளனர். அதேவேளை யில், பொதுமக்களுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை யில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அது ரூ.928.50 என்ற பழைய விலை யிலேயே நீடிக்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.