டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க செனட்டில் தோல்வி
6 Mar 2026, 3:17 pm
<p><strong>டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க செனட்டில் தோல்வி</strong></p>
<p>வாஷிங்டன், மார்ச் 6 - ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘போர் அதிகாரத் தீர்மானம்’ (War Powers Resolution), அமெரிக்க செனட் சபையில் போதிய ஆதரவின்றித் தோல்வியடைந்தது. இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே ஈரான் மீதானத் தாக்குதல்களைத் தொடரும் அதிகாரம் டிரம்ப் வசமே நீடிக்கிறது. செனட் சபையில் நிலவிய கடும் மோதல் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே (Congress) உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி ஜனநாயகக் கட்சியினர் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். செனட் சபையில் நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் போது, எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஈரான் மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவை ஒரு நீண்டகாலப் போருக்குள் இழுத்துச் செல்லும் என்று அவர்கள் எச்சரித்தனர். இருப்பினும், செனட்டில் பெரும்பான்மையாக உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால் இத்தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது. “ஜனாதிபதியின் கைகளைக் கட்ட முடியாது” இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சித் தலைவர்கள், போர்ச் சூழலில் நாட்டின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதியின் கைகளைக் கட்டுப்படுத்துவது தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்று வாதிட்டனர். ஈரானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஜனாதிபதிக்குத் தார்மீக அதிகாரம் தேவை என்றும், இத்தகைய கட்டுப்பாடுகள் எதிரிகளுக்குச் சாதகமாக அமையும் என்றும் அவர்கள் தெரி வித்தனர். ஜனநாயகக் கட்சியினரின் ஏமாற்றம் தீர்மானம் தோல்வியடைந்தது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், “அமெரிக்க மக்கள் மற்றொரு தேவையற்ற போரை விரும்பவில்லை. ஆனால், செனட் சபை தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து ஜனாதிபதியின் தன்னிச்சையானப் போக்கிற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது” என்று அதிருப்தி தெரிவித்தனர். இந்தத் தோல்வியானது, மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. போரின் தீவிரம் அதிகரிக்கும் அபாயம் இந்தத் தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஈரான் தனது பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் தலையீடு இல்லாதது இப்பிராந்தியத்தில் முழு அளவிலானப் போர் (Full-scale war) மூளும் அபாயத்தை அதிகரித்துள்ளது.</p>
