முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் திருவண்ணாமலை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் திருவண்ணாமலை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்</strong></p>
<p>திருவண்ணாமலை ,டிச.21- முதியோர் ஓய்வூதியத் தொகையை ரூ.5ஆயிரமாக உயர்த்த வேண்டும் என திருவண்ணாமலையில் நடை பெற்ற ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத் தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ப. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு. நீதிமாணிக்கம் வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வூ தியர் சங்க மாநில செயலாளர் சி. சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார், தமுஎகச மாவட்ட தலைவர் நா. முத்து வேலன் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு தற்பொழுது வழங்கி வரும் முதியோர் ஓய்வூதிய தொகையினை 1200 ரூபாயில் இருந்து ரூ.5ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். ஐரோப்பிய நாடுகளில் முதியோர் நலம் பாது காப்பதை போல தமிழ்நாட்டில் பொதுமக்களில் 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் மாதம் தோறும் 5ஆயிரமாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதிய மாற்றத்தினை கேள்வி க்குறியாக்கும் ஓய்வூதிய விதிகள் சீராய்வு சட்டத்தினை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும், 8வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாட்டுத் திட்டக் குறிப்பு பட்டியலில் ஓய்வூதிய மாற்றத்தையும் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.</p>
