தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிகப்படியான அறுவடை இயந்திரத்திற்கு எதிர்ப்பு

2 Feb 2026, 3:32 pm
அதிகப்படியான அறுவடை இயந்திரத்திற்கு எதிர்ப்பு
<p><strong>அதிகப்படியான அறுவடை இயந்திரத்திற்கு எதிர்ப்பு</strong></p> <p>இராமநாதபுரம், பிப்.2- இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் &nbsp;அறுவடை காலம் துவங்கி நடைபெற்று &nbsp;வரும் நிலையில், நெல் அறுவடை இயந்தி ரங்களின் தேவை அதிகரிக்கும்போது வாட கைத் தொகை உயர்ந்து விடுகிறது. தனியார் &nbsp;இயந்திர உரிமையாளர்கள் டிராக் வகை &nbsp;இயந்திரத்திற்கு அதிகப்படியான கட்டண மாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை வாடகை வசூலிப்பதாக விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் வந்ததைத் தொடர்ந்து, விவசாயி கள், தனியார் அறுவடை இயந்திர உரிமை யாளர்கள் மற்றும் அரசு வேளாண் உயர் &nbsp;அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் &nbsp;மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப் பட்டது. புகார் தெரிவிக்கலாம் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் டிராக் வகை அறுவடை இயந்தி ரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை &nbsp;ரூ.2800ம் மற்றும் டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.1700 என்றும் நிர்ணயம் செய் &nbsp;யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் விவசாயி களிடமிருந்து வசூல் செய்து அறுவடை &nbsp;இயந்திர உரிமையாளர்கள் இயந்தி ரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு &nbsp;வழங்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட &nbsp;தொகைக்கு கூடுதலாக தொகையினை அறுவடை இயந்திரம் உரிமையாளர்கள் கோரினால் வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம். தற்காலிகமாக கூடுதலாக ஒதுக்கீடு மேலும், இராமநாதபுரம் மாவட்டத் திற்கு வேளாண்மை பொறியியல் துறைக்கு &nbsp;சொந்தமாக ஒரு டிராக் வகை அறுவடை இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாடகை மணிக்கு ரூ.1880 ஆகும். விவசாயிகள் நலன் கருதி அருகி லுள்ள மாவட்டங்களிலிருந்து 2 டயர் வகை &nbsp;(வாடகை ரூ.1160) அறுவடை இயந்திரம் &nbsp;தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து பெறப் &nbsp;பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களி லிருந்து கூடுதலாக டிராக் மற்றும் டயர் &nbsp;வகை அறுவடை இயந்திரங்கள் தற்காலிக மாக ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு செய்யலாம் எனவே வேளாண் பெருமக்கள் வேளாண் பொறியியல் துறையின் இ-வாட கைத் திட்டத்தில் வேளாண்மை பொறியி யல் துறைக்கு சொந்தமான அறுவடை இயந்திரத்திரங்களை உழவன் செயலி யில் முன்பதிவு செய்து பெற்று பயன் பெற லாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.