குடியிருப்பாளர் சங்க துவக்க விழா
2 Feb 2026, 3:32 pm
<p><strong>குடியிருப்பாளர் சங்க துவக்க விழா</strong></p>
<p>இராஜபாளையம், பிப்.2- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் சுதர்சனம் கார்டன் சொந்த வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் துவக்க விழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு நக ராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் துவக்கி வைத்தார். சங்கத் தலைவர் ரகுபதி ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சங்கச் செயலாளர் ரவிச்சந்திரன், உதவி தலைவர் பத்மநாபன், பொருளாளர் தீத்தா ரப்பன் மற்றும் சங்க உறுப்பி னர்கள், குடியிருப்பில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். 25 ஆண்டுகளுக்கு மேலாக பழ மைவாய்ந்த இந்த குடியிருப்பில் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்ய வேண்டும், குடியிருப்பு நுழைவு பகு தியில் பிளக்ஸ் போர்டுகள் வைப்ப தைத் தடுக்க வேண்டும், சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும், குப்பை குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், கொசுத் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் 41வது வார்டு கவுன்சிலர் ராஜ், மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பான தீர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். முடிவில், சங்க உதவி தலை வர் பத்மநாபன் நன்றி தெரி வித்தார்.</p>
<p> </p>
