குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு தமிழ் முற்றம் அமைப்பு துவக்கம்
29 Jan 2026, 5:39 pm
<p><strong>குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு தமிழ் முற்றம் அமைப்பு துவக்கம் </strong></p>
<p>கடலூர், ஜன.29- கடலூரில் குடியிருப் போர் கூட்டமைப்பு கடலூ ரில் தமிழ் வளர்ச்சிக்கு” தமிழ் முற்றம்” என்ற அமைப்பு துவக்குவது என்று முடிவு செய்யப்பட்டது . சமீபத்தில் நடைபெற்ற தமிழ் ஆர்வலர்கள் கூட்ட த்திற்கு இளங்கோவன் தலைமை தாங்கினார். சண்முகம் அனைவரையும் வரவேற்றார். உறுப்பினர்க ளின் ஆலோசனைக்குப் பிறகு தமிழ்முற்றம் அமைப்பு தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. தமிழ் முற்றம் அமைப்பின் தலைவராக இளங்கோவன், செயலராக பாலு.பச்சையப்பன், பொரு ளாளராக வெங்கட்ரமணி, சிறப்பு தலைவர்களாக பி.வெங்கடேசன், எம்.மருதவாணன் மற்றும் ஆலோசகர்களாக முனை வர் ராஜா, கவிஞர் வெற்றிச் செல்வி சண்முகம், கவிஞர் கவிமனோ ,தமிழ் ஆர்வ லர் முத்துக்குமரன் ,கவிஞர் குறிஞ்சி ரவி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், கடலூரில் இயல், இசை, நாடகம், வளர்த்த பாபு கலையரங்கம் மாநக ராட்சியால் வேறு பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடன டியாக அங்கு திருவள்ளுவர் பெயரில் திருவள்ளுவர் திறந்தவெளி கலையரங்கம் உருவாக்கப்பட்டு அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட வேண்டும். கடலூரில் கடற்கரைச் சாலையில் நீதிமன்றத்தில் அருட்பா பாடிய வள்ள லார் சாட்சி சொன்ன இடத்தில் வள்ளலாருக்கு நினைவரங்கம் கட்டப்பட வேண்டும். புனித வளவனார் பள்ளிக்குச் செல்லும் சாலை சப் ஜெயில் சாலை என்று உள்ளது அதற்கு “பாரதிதாசன் சாலை “என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் . கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்க ளுக்கு அவர்கள் தமிழுக்கும் நாட்டுக்கும் செய்த சேவையை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு ஒரு நினை வரங்கம் கட்டப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் கவிஞர் மா.ரா.சிங்காரம் நன்றி கூறினார்.</p>
