மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக அறிவித்திடுக குடியிருப்போர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்
28 Dec 2025, 5:05 pm
<p><strong>மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக அறிவித்திடுக குடியிருப்போர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்</strong></p>
<p> சிதம்பரம், டிச. 28- சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என அனைத்துக் குடியிருப்போர் நல சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. சிதம்பரம் இளமையாக்கினார்கோயில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்துக் குடியிருப்போர் நல சங்கங் களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத் திற்குத் தலைவர் கே.என். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் என். கலிய மூர்த்தி திட்ட அறிக்கையைப் படித்தார். பொருளாளர் ஆர். ராகவேந்திரன் வர வேற்றுப் பேசினார். கூட்டத்தில் வர்த்தகர் சங்கத் தலைவர் ஏ.வி. அப்துல்ரியாஸ், வள்ளலார் பணியகம் பொதுச்செயலாளர் வே. சுப்பிரமணியசிவா, நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் சங்கமேஸ்வரன் மற்றும் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம், கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம், மரபுவழி இயற்கை வேளாண்மை உழவர் நல சங்கம், ஓய்வுபெற்ற காவலர்கள் நல சங்கம், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நல சங்கம் மற்றும் குடியிருப்போர் நல சங்கக் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர். தீர்மானங்கள் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பல்நோக்கு மருத்துவ மனையாகத் தரம் உயர்த்தி, இதய சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பிரிவு களும் தொடங்க வேண்டும். சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட உள்ள வெளிவட்டச் சாலை யைத் தில்லையம்மன் ஓடையில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தி விரைவில் அமைத்திட வேண்டும். சிதம்பரம் நகரில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம், தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வரு வதால் சுற்றுலாப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சிதம்பரம் நகரை ஆக்கிரமித்து விடுவதால் போக்குவரத்து திணறுகிறது. எனவே நகருக்கு வெளியே வாகனங்கள் நிறுத்துமிடத்துடன் யாத்திரை நிவாஸ் விடுதி அமைக்க வேண்டும். நகரில் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தித் திடக்கழிவு மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்திக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.</p>
