வடசென்னையில் மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்துக குடியிருப்போர் சங்கங்கள் மனித சங்கிலி போராட்டம்
15 Mar 2026, 4:11 pm
<p><strong>வடசென்னையில் மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்துக குடியிருப்போர் சங்கங்கள் மனித சங்கிலி போராட்டம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 15- வடசென்னையை ஒட்டு மொத்த சென்னை நகரத்து டன் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த வலியுறுத்தி, மெட்ரோ ரயில் சேவைக் குழு சார்பில் இன்று (ஞாயி ற்றுக்கிழமை) பிரம்மாண்ட மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. மணலி புதுநகர் பால் பூத் முதல் துவாரகா நகர் வரை நீண்ட இந்த மனித சங்கிலியில், இப்பகுதி குடி யிருப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்றனர். பங்கேற்றவர்கள் இந்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் தென்கனல், தீனதயாளன், ஜெயக்குமார், கோவேந் தன், ஜோதிகுமார், கார்த்தி, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், வட சென்னை குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் டி.கே. சண்முகம், பொதுச் செயலாளர் ஆர். ஜெயரா மன், அமைப்புச் செயலாளர் எஸ்.ஏ. வெற்றிராஜன், துணைச் செயலாளர்கள் நிரஞ்சன் பட்நாயக், துரை ராஜ், சுப்பிரமணி, ஃபெமா மோகன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். கோரிக்கையின் பின்னணி சங்கத்தின் தலைவர் டி.கே. சண்முகம், செய்தியா ளர்களிடம் பேசுகையில், திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மாதவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 15 லட்சத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசிக்கின்ற னர். மேலும் இந்த பகுதி களில் உள்ள பெரிய தொழிற் சாலைகள், துறைமுகங்கள், லாஜிஸ்டிக் நிறுவனங்கள், கண்டய்னர் யார்டுகளில் பணிபுரியும் தொழிலாளர் கள் எண்ணிக்கை 5 லட்சத் துக்கும் மேல் உள்ளன. மணலி - எண்ணூர் - திரு வொற்றியூர் பகுதி பெட்ரோ கெமிக்கல் தொழிற் சாலைகள், அனல் மின் நிலை யங்கள், துறைமுகத் தொழில்களின் குவி மைய மாகும். இந்த அளவுக்கு தொழில் ஒருமுகப்படுத்தல் இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இல்லை. மாத வரம் முனையில் இருந்து மணலி புதுநகர் வழியாக எண்ணூர் வரையும், விம்கோ மெட்ரோ முனை யில் இருந்து எண்ணூர் வரை யும் மெட்ரோ சேவை விரி வாக்கும் போது இந்தியா வின் மிகப்பெரிய தொழில் துறை மெட்ரோ வழித் தடமாக மாறும். மேலும் இந்த காரிடார் பொது மக்களின் பயன்பாடு மட்டு மல்லாமல், தொழில்துறை பயணிகளின் பெரிய வழித் தடமாக மாறும். மிகப்பெரும் தொழில் துறை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், எண்ணூர் பகுதி கள் மெட்ரோ சேவை இல்லாத வஞ்சிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.புதிய மெட்ரோ வழி தடத்தினால் வடசென்னை உண்மை யான வளர்ச்சி பெறும். மக்கள் தொகை குறைவு என்ற காரணத்தை கூறி ஒன்றிய அரசு இந்த கோரிக் கையை உதாசீனம் செய்யா மல், நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு உறுதுணை யாக நின்று முன் முயற்சி எடுக்க வேண்டும். என்று அவர் கேட்டுக் கொண்டார்.</p>
<p> </p>
