திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் 484 புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு குடிமனை பட்டா
22 Feb 2026, 3:26 pm
<p><strong>திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் 484 புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு குடிமனை பட்டா</strong></p>
<p>திருத்துறைப்பூண்டி, பிப்.22- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு, பட்டா இல்லாத நிலை ஏற்பட்டதால், திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தமிழக அரசிடம் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது, முதற்கட்டமாக 484 அரசு புறம்போக்கு நஞ்சை நிலங்களில் குடியிருந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், அனைத்து பயனாளிகளுக்கும் குடிமனை பட்டா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி, வர்த்தக சங்க தலைவர் செந்தில்நாதன், நகராட்சி ஆணையர் கிருத்திகா தேவி, வட்டாட்சியர் பரமேஸ்வரி, நகர மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p>
