முந்தய பக்கம்

வெள்ளி நகைகளுக்கு கடன் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறை

12 Nov 2025, 3:20 pm
வெள்ளி நகைகளுக்கு கடன் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறை
<p><strong>வெள்ளி நகைகளுக்கு கடன் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறை</strong></p> <p>வெள்ளி நகைகள் மீது கடன் வழங்கும் நடைமுறை வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. &nbsp;இதற்கான ஒப்புதலை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. மேலும் வெள்ளி மற்றும் தங்க நகைக்கடன் விதி முறைகளையும் ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ளது. வெள்ளி நகைகள் அல்லது நாண யங்கள் மீது மட்டுமே கடன் வழங்கப்படும் &nbsp;என்றும் வெள்ளிக் கட்டிகள் மீது வழங் &nbsp;கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. 10 கிலோ வரையிலான வெள்ளி &nbsp;நகைகள், அரை கிலோ வரையிலான வெள்ளி நாணயங்களுக்கு கடன் வழங் கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளுக்கு அதிகபட்சம் 1 கிலோ வரையும், தங்க நாணயங்களுக்கு &nbsp;அதிகபட்சம் 50 கிராம் வரையும் கடன் &nbsp;வழங்கப்படும் எனவும், வெள்ளி நகை களுக்கு &nbsp;அதிகபட்சம் 10 கிலோ வரையும், &nbsp;வெள்ளி நாணயங்களுக்கு அதிகபட்சம் 500 கிராம் வரையும் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;கடன் மதிப்பு விகிதத்திற்கான வரம்பு அடகு வைக்கப்படும் ரூ.2.5 லட்சம் வரையிலான பொருட்களுக்கு அதிகபட்சம் 85 சதவீதம் வரை கடன் &nbsp;வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதே போல 2.5 லட்சம் முதல் 5 லட் &nbsp;சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட பொருட்களுக்கு &nbsp;அதிகபட்சம் 80 சதவீதம் &nbsp;வரையும் &nbsp;5 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட &nbsp;பொருட்களுக்கு அதிக பட்சம் 75 சதவீதம் வரையிலும் கடன் &nbsp;கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram