முந்தய பக்கம்

சமயசங்கிலி கிராமத்தில் ஆய்வு

2 Jan 2026, 3:33 pm
சமயசங்கிலி கிராமத்தில் ஆய்வு
<p><strong>சமயசங்கிலி கிராமத்தில் ஆய்வு</strong></p> <p>நாமக்கல், ஜன.2- சமயசங்கிலி கிராமத்தில் பயிரிடப்பட்டு, கொள் முதல் செய்யப்படவுள்ள பொங்கல் கரும்புகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நேரில் ஆய்வு செய் தார். பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமி ழக அரசின் சார்பில் வழங்கப்படும் கரும்புகள் வரு டந்தோறும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள சமயசங்கிலி கிராமத்தில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். அதனடிப்படையில் கூட்டுற வுத்துறை மூலமாக கரும்புகளை கொள்முதல் செய் வதற்காக கரும்புகளின் தரம், உயரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெள்ளி யன்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட ஆட்சி யர் ஆய்வின் போது, தாங்கள் பயிரிட்டுள்ள முழு கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றிற்கான உரிய கூலி தமிழக அரசு சார்பில் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்வில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், குமாரபாளையம் வட்டாட்சியர், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram