வீடு கட்ட வழங்கிய கடனுக்கான வட்டியை ரத்து செய்ய கோரிக்கை
8 Dec 2025, 4:39 pm
<p><strong>வீடு கட்ட வழங்கிய கடனுக்கான வட்டியை ரத்து செய்ய கோரிக்கை</strong></p>
<p>சென்னை, டிச. 8- எண்ணூர் பகுதியில் வீடு கட்ட வழங்கிய கடனுக்கான வட்டி, தண்ட வட்டியை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.தியாகராஜன் கூறுகையில், சென்னை எண்ணூரில் ரயில்வேக்கு சொந்தமான காலி நிலத்தில் 1965ஆம் ஆண்டு முதல் 300 குடும்பங்கள் வசித்து வந்தனர். மேற்படி குடியிருப்பை ரயில்வே காலி செய்ய முயற்சித்த போது, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் முதுபெரும் தலைவருமான தோழர் வி.பி.சிந்தன் முயற்சியால் மேற்கண்ட குடும்பங்களுக்கு அருகாமையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ஐஒய்எஸ்எச் திட்டத்தின் படி ரூ.6,400 கடனாக வழங்கப்பட்டது. இதையடுத்து வஉசி நகர் என பெயரிட்டு அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மேற்படி கடன் தொகையை வசூலித்துக் கொண்டி ருந்த குடிசை மாற்று வாரியம் இடையில் நிலுவைத் தொகையை வசூல் செய்யாமல் விட்டு விட்டு, கடந்த அக்டோபர் மாதம் திடீரென மேற்படி கடனுக்கான வட்டி, தண்ட வட்டி என்ற வகையில் ரூ.1,30,742 உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் வீட்டு மனைக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் தண்டையார்பேட்டை எஸ்டேட் அலுவலர் அனைத்து குடும்பங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இங்கு வசிக்கும் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வரு கின்றனர். தற்போது திடீரென லட்சக்கணக் கில் பணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு வட்டி, தண்ட வட்டியை ரத்து செய்து, மீதமுள்ள அசல் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு குடியிருப்புகளை உறுதி செய்யும் வகை யில் கிரயப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p>
