தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாயகம் திரும்பியோர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்குக் கோரிக்கை

4 Mar 2026, 5:01 pm
தாயகம் திரும்பியோர் நலவாரியம் அமைக்க  தமிழக அரசுக்குக் கோரிக்கை
<p><strong>தாயகம் திரும்பியோர் நலவாரியம் அமைக்க&nbsp; தமிழக அரசுக்குக் கோரிக்கை</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 4 - &nbsp;தமிழ்நாட்டிலிருந்து இருநூறு ஆண்டு களுக்கு முன் கூலிகளாக ஆங்கிலேயரால் கொண்டு செல்லப்பட்டு, தங்கள் கடின உழைப் பால் இலங்கையை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றிய மலையகத் தமிழர்களின் குடி யுரிமை 1948-இல் பறிக்கப்பட்டது. &nbsp;அதன் பின்னர் 1964-இல் இந்திய - இலங்கை அரசுகளால் உருவாக்கப்பட்ட சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்தியக் குடியுரிமை பெற்றுத் தற்போது இந்தியாவிற்கு வந்தவர்கள் சுமார் 20 லட்சம் பேர் தமிழ்நாட்டில் அடிப்படை வாழ்வாதார உத்தரவாதமின்றி வாழ்கின்றனர். இதே போல பர்மாவிலிருந்தும் பல்லாயிரக்கணக் கானோர் தாயகம் திரும்பினர். &nbsp;எனவே, இவர்களுக்குத் தமிழ்நாடு அரசு &nbsp;&lsquo;தாயகம் திரும்பியோர் நலவாரியம்&rsquo; அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை &nbsp;தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமைக் கூட்ட மைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் 3.3.2026 அன்று மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் ஆ. தமிழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரு. பூபா லன், எஸ். இசெட். ஜெயசிங், எம். நெடுஞ் செழியன், ஞா. டார்வின்தாசன், எஸ்.பி. &nbsp;செவந்தி, அ. விஜயசிங்கம், ஆர்.எல். நட ராஜ், பா.வெ. துரைராஜ், எஸ். சந்தியாகு, இரா. மருதநாயகம், க. செல்வநாயகம், சு. &nbsp;சற்குரு, ம. கேசவன், சு. செல்வராணி, மலர் &nbsp;கலைச்செல்வன் ஆகியோர் உரையாற்றி னர். மு. ஜெயா வரவேற்றார். பி. காந்தி வேல் நன்றியுரையாற்றினார். &nbsp;கூட்டத்தில் தாயகம் திரும்பியோருக் கென உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தேயி லைத் தோட்டக் கழகம் (TANTEA) மற்றும் ரப்பர் தோட்டக் கழகம் ஆகிய வற்றை மீண்டும் புத்துயிரளித்து தாயகம் &nbsp;திரும்பியோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தாயகம் திரும்பியோ ரின் ஆவணங்கள் வருவாய்த் துறை அலு வலகங்களில் இருந்து திருப்பிக் கொடுக் கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் உள்ள &nbsp;தாயகம் திரும்பியோரின் குழந்தைகள் தமிழ்நாட்டில் கல்வி பயில உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மறுவாழ்வுத் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை ஆக்கிர மிப்பாளர்களிடமிருந்து மீட்டு உரியவர் களுக்குத் திரும்பத் தர வேண்டும். மீண்டும் &nbsp;கல்வி, வேலைவாய்ப்புகளில் இரண்டு சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.