சாதிய எண்ணத்தோடு செயல்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
6 Jan 2026, 4:23 pm
<p><strong>சாதிய எண்ணத்தோடு செயல்படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், ஜன.6- திருப்பூர் மாவட்டம், காங் கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதிய எண்ணத் தோடு செயல்பட்டு வரும் தலைமை ஆசிரியர் சிவக்கு மார் மற்றும் இரு ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவ் வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியினர், பாதிக்கப்பட்ட ஆசிரியர் நளினி மற்றும் அவரது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியரை செவ்வாயன்று நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதில் கூறப்பட்டிருப்பதாவது: காங் கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண் டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆசி ரியர் சிவக்குமார், இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். மேலும் கௌசல்யா, பிரபா ஆகிய இரு ஆசிரியர்கள், இதே பள்ளியில் பணியாற்றி வரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆசி ரியை நளினியை சாதிய வன்மத்தோடு மாண வர்கள் மத்தியில் இழிவுபடுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரி யர்கள் மூன்று பேர் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ள னர். இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஞானசேகர், மாவட்டச் செயலாளர் ஆர்.பரம சிவன், மாவட்ட துணைத் தலைவர் ச. நந்தகோ பால், மாவட்டக் குழு உறுப்பினர் செல்ல முத்து, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை தலைவர் அ.சு.பவுத்தன், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் கன்னியப்பன், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் சாவித்திரி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
