தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவமரியாதை செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

1 Dec 2025, 5:20 pm
அவமரியாதை செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
<p><strong>அவமரியாதை செய்யும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை</strong></p> <p>நாமக்கல், டிச.1- நூறு நாள் வேலைத்திட்டத்தில் முறைகேட்டில் ஈடு பட்டும், மக்களை தரக்குறைவாக பேசும் மக்கள் நலப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எருமப் பட்டி ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;கோணங்கிப்பட்டி கிளைச் செயலாளர் எஸ்.ஐயப்பன் &nbsp;என்கின்ற தினேஷ்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, விவசாய சங்கத்தில் நான் பொறுப்பாளராக பணி யாற்றி வருகிறேன். இந்நிலையில் கோடங்கிபட்டி பகுதியில் &nbsp;100 நாள் வேலை என அழைத்துச் சென்று மக்கள் நலப்பணி யாளர் ஜே.ஆர்.எஸ்.சுமித்ரா என்பவர் வேலைக்கு வரு பவர்களை சாதி பற்றி தரக்குறைவாக பேசுகிறார். மேலும், &nbsp;முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்காமல் அவர்களையும் தரக்குறைவாக பேசி வரு கிறார். மக்கள் நலப் பணியாளர் அவரது உறவினருக்கு மட்டும் அதிக நாட்கள் வேலை கொடுத்து வருகிறார். மற்ற &nbsp;நபர்களுக்கு வேலைகள் தருவதே கிடையாது. வேலை செய்யும் அட்டையையும் அவரது உறவினர்கள் பெயரில் உள்ள அட்டையை மட்டும் வாங்கி வைத்துக் கொள் கிறார். வேலைக்கு வராமலே வந்த மாதிரி கணக்கு காட்டி &nbsp;உறவினர்கள் அட்டையை வரவு வைத்துக் கொள்கிறார். இது &nbsp;சம்பந்தமாக நாங்கள் மேலும் விசாரித்த பொழுது &ldquo;என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது. நான் &nbsp;அனைவருக்கும் சேர வேண்டிய பங்கை மாதமாதம் &nbsp;கொடுத்து வருகிறேன்&rdquo; என எங்களை மிரட்டுகிறார். எனவே இது குறித்து முழுமையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது சம்பந்த மாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே &nbsp;பிரச்சனைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர் மீது &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள் ளனர். இந்த மனு அளிக்கையில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.சிவச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.