தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெருமாநல்லூரில் இருந்து புதுத்திருப்பூர் வரை தனி சிறப்பு பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

20 Feb 2026, 2:39 pm
பெருமாநல்லூரில் இருந்து புதுத்திருப்பூர் வரை  தனி சிறப்பு பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
<p><strong>பெருமாநல்லூரில் இருந்து புதுத்திருப்பூர் வரை &nbsp;தனி சிறப்பு பேருந்துகள் இயக்கக் கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், பிப். 20 - திருப்பூர் மாவட்டம், புதுத்திருப்பூர் &nbsp;பகுதியில் உள்ள நேதாஜி ஆயத்த &nbsp;ஆடை பூங்காவில் பல்லாயிரக்க ணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதிக்கு பெரு மாநல்லூரில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் தனியாக சிறப்பு அரசுப் பேருந்துகளை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகின்றனர். இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான, நேதாஜி அப்பே ரல் பார்க், 2003 ஆம் ஆண்டு 166 ஏக் கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இங்கு 53க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 15 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு உற்பத்தி &nbsp;செய்யப்படும் ஆடைகள் அமெரிக்கா, &nbsp;ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தொழில் பூங்கா திருப்பூரின் ஆடை &nbsp;ஏற்றுமதியின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் கணிசமானோர் உத் தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த &nbsp;புலம்பெயர்ந்தோர் ஆவர். மேலும், &nbsp;தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்க ளில் இருந்தும் ஏராளமானோர் பணிக் காக இங்கு குடியேறியுள்ளனர். இவர்க ளில் பெரும்பாலானோர் புதுத்தி ருப்பூரை ஒட்டியுள்ள பெருமாநல்லூர், தட்டாங்குட்டை, அய்யம்பாளையம், லட்சுமி கார்டன், ஆதியூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி பணியாற்றி வருகின்றனர். பல &nbsp;தொழிற்சாலைகள் தங்கள் தொழி லாளர்களுக்கு தனியே பேருந்து &nbsp;வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ள போதும், இப்பேருந்துகளில் அவர்க ளால் பயணிக்க முடிவதில்லை. எனவே &nbsp;காலை, மாலை நேரங்களில் கூடுதல் &nbsp;அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் &nbsp;என தொழிலாளர்கள் கோருகின்றனர். &nbsp;இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த &nbsp;தொழிலாளிகள் கூறுகையில், பெரும் பாலான நிறுவன பேருந்துகள் காலை &nbsp;8 மணிக்கு முன்பாகவே புறப்பட்டுவி டுகின்றன. வீட்டில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, சமைப்பது போன்ற அன்றாட வேலைகளை முடித் துவிட்டு, இந்த பேருந்துகளை பிடிப் பது மிகவும் கடினமாக உள்ளது. சில &nbsp;நிறுவனங்களில் பேருந்து வசதியே இல்லை. இதனால், அரசுப் பேருந்து களை நம்பித்தான் உள்ளோம். பெரு மாநல்லூர் நால்ரோடு சந்திப்பு இப்ப குதியின் முக்கிய போக்குவரத்து மைய மாக உள்ளது. காலை பெருமாநல்லூ ரில் இருந்து புதுத்திருப்பூர் நோக்கி செல்ல குறித்த நேரத்திற்கு ஒரு &nbsp;அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படு கிறது. இதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த ஒரே பேருந்தில் முண்டியடித்து ஏறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதேபோல், மாலை நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பவும் போதிய பேருந்து வசதி இல்லை. தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பேருந்து திட்டம் பெண் தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. இத் திட்டத்தின் பயனை முழுமையாகப் பெறும்வகையில், பெருமாநல்லூர் முதல் புதுத்திருப்பூர் வரை காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்து களை இயக்க வேண்டும். குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் அதிகாலை நேரங்களில் பாதுகாப்பான மற்றும் கூட்ட நெரிசலின்றி பயணிக்க கூடுதல் &nbsp;பேருந்துகள் அவசியம் என வலியு றுத்தினர். எனவே அரசு போக்குவரத்துக் கழ கம் உடனடியாக கள ஆய்வு மேற் கொண்டு, பேருந்துகளின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும், குறிப் பாக நியூ திருப்பூர் பகுதிக்கு தனி யாக சிறப்புப் பேருந்துகளை காலை, மாலை நேரங்களில் இயக்கினால், ஆயி ரக்கணக்கானோர் பயன் பெறுவர் என தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் கூறி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.