பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை
29 Jun 2026, 9:04 pm
<p><strong>பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை</strong></p><p>நாகர்கோவில், ஜூன் 29 -</p><p>குளச்சல் வட்டாரப் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎம் குளச்சல் வட்டாரக் குழு செயலாளர் பா.ராஜு தெரிவிக்கையில், “கோடிமுனை அன்பியம் 23 பகுதியின் தெருவில் அமைந்துள்ள இரண்டு மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த கம்பத்தில் இருந்து 838, 852, 858, 500, 1155, 666, 288, 680, 3289, 290, 1156, 1149 போன்ற வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பம் அமைந்துள்ள பகுதி வீடுகள் அடர்த்தியான, மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியாகும். எனவே பழுதடைந்து காணப்படும் இரண்டு மின் கம்பங்களையும் மாற்றி புதிய மின் கம்பம் அமைத்து தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.</p>
