முந்தய பக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

27 Nov 2025, 3:11 pm
அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை
<p>சிதம்பரம், நவ 27- சிதம்பரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலை சீரமைக்க குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரம்-சீர்காழி சாலையில் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே சுவாமி சகஜானந்தா அரசினர் தொழில் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. &nbsp;இங்கு எலக்ட்ரிஷன், மெக்கானிக், பிட்டர், வெல்டர், வயர் மேன் உள்ளிட்ட 9 துறைகள் உள்ளன. &nbsp;இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 384 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். &nbsp;இந்த நிலையில் மாணவர்கள் மெயின் ரோட்டில் இருந்து &nbsp;தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. &nbsp;இதனால் அவ்வழியாக செல்லுவதில் மாணவர்க ளுக்கு சிரமம் ஏற்படுகிறது. &nbsp;இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என சிதம்பரம் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை விடுத்து இது குறித்து கடிதம் அவருக்கு அனுப்பியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram