மெலட்டூர் அருகே வாய்க்காலில் ஆகாயத் தாமரையை அகற்ற கோரிக்கை
4 Dec 2025, 3:52 pm
<p><strong>மெலட்டூர் அருகே வாய்க்காலில் ஆகாயத் தாமரையை அகற்ற கோரிக்கை</strong></p>
<p>பாபநாசம், டிச.4- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, நரசிங்கமங்கலத்தில், வெட்டாற்றிலிருந்து பிரிகின்ற சேத்து வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் சில ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் ஆகாயத் தாமரை, வெங்காயத் தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் புதராக மண்டியுள்ளன. இதனால், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், ஆகாயத் தாமரை‌ உள்ளிட்ட செடிகளை‌ உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நரசிங்கமங்கலம் சேத்து வாய்க்காலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில், மாவட்ட துணைச் செயலர் செந்தில்குமார், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் குரு.சிவா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.</p>
