கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
27 Feb 2026, 5:32 pm

கிணற்றில் மிதந்த புலியின் சடலம் மீட்பு

உதகை, பிப்.27- நெலாக்கோட்டை வனத்தில் உள்ள கிணற்றில் மிதந்த புலியின் சடலத்தை வனத்துறையினர் மீட்டு, ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட நெலாக்கோட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் வியாழனன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணை வனப்பிரிவில் உள்ள திறந்தவெளி கிணற்றில் புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து புலியின் சடலத்தை வனத்துறையினர் மீட்டனர். இதுகுறித்து விசார ணைக்கு பிறகு சரணாலய கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையில், புலியின் சடலம் கூறாய்வு செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகள் சேகரிக ரிக்கப்பட்டது. இதன்பின் புலியின் சடலம் அதே இடத்தில் எரி யூட்டப்பட்டது. இறந்தது சுமார் 6 வயதுடைய ஆண் புலி என்றும், முழுவிவரங்கள் ஆய்வக அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விதொச போராட்டம் வெற்றி!

ஈரோடு, பிப்.27- எழுமாத்தூர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் சாக்கடை கால்வாயை சரி செய்யக்கோரிய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூ ரில் வாரச்சந்தை செயல்படுகிறது. இதன் அருகில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் சாக்கடை கால்வாய் உள்ளது. இதனை சரி செய்யக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுமாத்தூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கால் வாயை சீரமைக்க ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெள்ளியன்று சீரமைப்புப் பணிகள் துவங்கி யது. இப்பணிக்கு ஏற்பாடு செய்த ஈரோடு மாவட்ட ஆட்சியர், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் எழுமாத் தூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும் அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தாலுகா செயலாளர் த.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

முறையற்ற கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல்

உதகை, பிப்.27- உதகை நகராட்சியில் குடியிருப்பிற்கு அனுமதி பெற்று, வணிக ரீதியாக பயன்படுத்தி வந்த கட்டிடங்களுக்கு அதிகாரி கள் சீல் வைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, நகராட்சிக்குட்பட்ட ஆரணி அவுஸ் பகுதியில் இரு கட்டிடங்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடங் களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், குடியிருப்புக ளுக்கான அனுமதி பெற்று வணிகரீதியாக பயன்படுத்தி வரும் கட்டிடங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மசினகுடி மாவநல்லா பகுதி யில் கட்டிட அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இரு தங்கும் விடுதிகளுக்கும் (காட்டேஜ்) அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அங்கன்வாடியின் அவல நிலை: நிரந்தர கட்டிடம் கேட்டு போராட்டம் அவிநாசி, பிப்.27- அவிநாசியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தரக்கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அவிநாசி நகராட்சியில் கஸ்தூரிபாய் வீதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அங்கன்வாடி‌ மையம் செயல் பட்டு வந்தது. இக்கட்டிடம் பழுதின் காரணமாக பல ஆண்டு களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பல சமூக அமைப்புகள் மூலம் தனியார் இல்லங்களில் அங்கன்வாடி மையம் இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதையடுத்து நிரந்தர கட்டிடம் கேட்டு, கடந்தாண்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கஸ்தூரிபாய் வீதியில் அமைந் துள்ள தொடக்கப் பள்ளியில் உள்ள வகுப்பறை பகுதியை மறைத்து அங்கன்வாடி மையம் செயல்படுத்த, அனுமதி வழங்கியது. இருப்பினும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்கு போதிய இடமில்லாத காரணத்தால், ஊராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வாடகை கொடுத்து வேறு, உணவு சமைத்து வந்துள்ள னர். தற்போது புதனன்று இரவு பெய்த மழையால் அங்கன் வாடி மையத்திற்குள் மழை நீர் சூழ்ந்து‌, குழந்தைகள் அமர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைக ளின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத் தியதன்பேரில், போராட்டம் முடிவுக்கு வந்தது.

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை: சிபிஎம் கவுன்சிலர்கள் கேள்வி

அவிநாசி, பிப்.27- திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்க ளுக்கு இஎஸ்ஐ பிஎப் பிடித்த பணம் முறையாக செலுத்தப்படுகிறதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கேள்வி எழுப்பியுள் ளார். திருமுருகன்பூண்டி நகர்மன்ற அவசரக் கூட்டம், நகர்மன்றத் தலை வர் குமார் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் 25க்கும் மேற்பட்ட தீர்மானங் கள் முன்வைக்கப்பட்டன. இக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பேசுகையில், தூய்மைப் பணியா ளர்களுக்கு இ.எஸ்.ஐ மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த நான்கு மாதங்க ளாக இது குறித்த குறுஞ்செய்திகள் பணியாளர்களின் கைபேசிக்கு வரு வதில்லை. இத்தொகை முறையாக செலுத்தப்படுகிறதா என்பதை நிர் வாகம் உறுதி செய்ய வேண்டும். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயற்கை முறையில் முறையாக பராமரிக்க வேண்டும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கழிப் பிட கட்டிடப் பணிகளை தேர் திருவிழாவிற்குள் முடிக்க வேண் டும். பழைய நகராட்சி கட்டிடத்தை வரி வசூல் மற்றும் ஆதார் மைய மாக மாற்ற வேண்டும். பழைய காவல் நிலைய இடத்தில் வணிக வளாகம் கட்டி நகராட்சிக்கு வரு வாய் ஈட்ட வேண்டும்” என வலியு றுத்தினார். இதனைத் தொடர்ந்து சிபிஎம் உறுப்பினர் தேவராஜன் பேசுகை யில், “அதிக குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் போர்வெல் அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண் டும். குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட இடங்களில், சம்பந் தப்பட்ட வார்டு கவுன்சிலர்களிடம் உரிய கையொப்பம் பெற வேண் டும்” என்றார். முன்னதாக, தேர்தல் அறிவிப்பு வரவுள்ளதால் அவசரக் கூட்டம் நடத்தப்படுவதாக ஆணை யர் விளக்கமளித்தார். உறுப்பி னர்களின் கோரிக்கையை ஏற்று இக்கூட்டத்தை சாதாரண கூட்ட மாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 60 ஆண்டுகள் சிறை

உதகை, பிப்.27- கூடலூர் பகுதியில், 15 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த அவரது உறவுமுறை சகோதரருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதி மன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவ ருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மக னும், இரண்டு மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவி உயிரிழந்த நிலையில், அவரது பிள்ளைகள் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தனர். அவ்வப்போது தந்தை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்.15 ஆம் தேதி, கோடை விடுமுறைக்காகத் தந்தை வீட்டிற்கு சென்றிருந்த இரண்டாவது மனைவியின் 15 வயது மகள் (10-ம் வகுப்பு மாணவி), அங்குத் தனியாக இருந்தபோது அவ ரது முதல் மனைவியின் மகனான 32 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனை வெளி யில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி, அந்த இளைஞர் அச்சிறுமியைத் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமானார். இச் சம்பவம் குறித்துத் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர் கள், சிறுமியை சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட் டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீதான குற்றச் சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளியன்று தீர்ப்ப ளித்தார்.

சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு

சேலம், பிப்.27- ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மேக்னசைட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்கு ஜவுளி பூங்கா மற்றும் சாயப்பட்டறைகள் அமைக்க கூடாது குறிப்பாக 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைத்தால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 4000 ஏக்கரில் பயிரிடப் பட்டுள்ள தென்னை, பாக்கு, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரி வித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் டால்மியா போர்டு அருகில் உள்ள சம்பந்தப் பட்ட இடத்தின் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்நாய்கள் நடமாட்டம்

உதகை, பிப்.27- நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதி கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி காட்டு மாடு, கரடி, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் உலா வருவது தொடர்கதை யாக இருந்து வருகிறது. அந்த வகையில் வனப்பகு திகளில் அரிதாக காணப்ப டும் செந்நாய்கள், தற்போது கீழ் கோத்தகிரி அருகே உள்ள கோவில் மட்டம் பகு தியில் பகல் நேரத்தில் உலா வருகின்றன. இதனை கண்ட தேயிலை தோட்டத் தொழி லாளர்கள் அச்சமடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் கோவில் மட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செந் நாய் கூட்டங்களின் நடமாட் டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் பகல் நேரங்களில் செந்நாய் கள் உலா வருவதால், தொழி லாளர்களும், பொதுமக்க ளும் அச்சமடைந்துள்ளனர்.

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பு

தருமபுரி, பிப்.27- கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்க லில் உள்ள அருவிகள் வறண்டும், ஆற்றில் ஆங்காங்கே நீர் குட்டைகள் தோன்றி பாறை திட்டுக்களாக காணப்பட்டது. நீர்வரத்து விநா டிக்கு 300 கன அடி வரை சரிந்தது. இந்நிலை யில், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அள வானது வெள்ளியன்று காலை 8 மணி நில வரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியா கவும், 9 மணி நிலவரப்படி விநாடிக்கு 4 ஆயி ரம் கன அடியாக அதிகரித்தது. திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள் ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அளவுகள் குறித்து பிலி குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர்.

ஏரியில் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

தருமபுரி, பிப்.27- ஏரியில் கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள செம்மநத்தம் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்த மான தாமரை ஏரி உள்ளது. இந்த ஏரி சுற்று வட்டார கிராமங்களுக்கு முக்கிய நீராதார மாக உள்ளது. இந்நிலையில், இந்த ஏரியில் சிலர் கழிவுகளை கொட்டி மாசு ஏற்படுத்து வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்த னர். இந்நிலையில், வியாழனன்று மனிதக் கழிவுகளை ஏற்றிவந்த லாரி, கழிவுகளை ஏரிக்குள் கொட்டியது. இதையறிந்த அப்ப குதி மக்கள் திரண்டுவந்து, லாரியை சிறைப் பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகு றித்து தகவலறிந்த பாலக்கோடு காவல் துறை யினர் நிகழ்விடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதன்பின் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என லாரி உரிமையாளர் மற்றும் பணியாளர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

நாமக்கல், பிப்.27- பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளி லுள்ள நீர் நிலைகள் அருகே அதிகளவு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயத் தேவைகளுக்காக ஏரா ளமான ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலை கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர், இடதுகரை வாய்க்கால் வழியாக இப்பகுதிக ளுக்கு வந்து சேர்கிறது. இந்த நீரை ஆதார மாக கொண்டே விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது போதிய மழையில்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந் நிலையில், முக்கிய நீர்நிலைகளில் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள் ளன. “சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் சீமை கருவேல மரங்கள், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சும் தன்மை கொண் டவை. இதனால் கோடை காலம் தொடங்குவ தற்கு முன்பே நீர்நிலைகள் வறண்டு காணப் படுகின்றன. இதே நிலை நீடித்தால் வரும் கோடைக்காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது,” என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக் கும் வகையில், சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றக் கோரி சமூக ஆர்வ லர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஒன்றி ணைந்து பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளியன்று மனு அளித்த னர்.