தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்.கே. நகரில் குடியிருப்புப் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை

25 Feb 2026, 3:22 pm
ஆர்.கே. நகரில் குடியிருப்புப் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை
<p><strong>ஆர்.கே. நகரில் குடியிருப்புப் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரிக்கை</strong></p> <p>சென்னை,பிப்.25- &nbsp;சென்னை ஆர்.கே. நகர் 41-ஆவது வட்டத்திற் குட்பட்ட கொருக்குப் பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை யினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அந்தக் கடையை நிரந் தரமாக அகற்றக் கோரி &nbsp;தமிழகத் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலினி டம் மாமன்ற உறுப்பினர் பா. விமலா மனு அளித்தார். அந்த மனுவில், கொருக்குப்பேட்டை தேவி கருமாரியம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 12-இன் முன்பு தினசரி மதுப்பிரி யர்கள் அதிகளவில் கூடு வதால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகின்றனர். இளைஞர்களின் நலனுக் காகத் தமிழக அரசு &nbsp;அமைத்துள்ள விளையா ட்டுத் திடலுக்கு மிக அருகி லேயே (சுமார் 50 மீட்டர் தொலைவில்) இந்த மதுக்கடை அமைந்துள்ளது. இது இளைஞர்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமை யாகும் சூழலை உருவாக் குவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ள சூழலில், மதுக்கடைக்கு வரும் நபர்களால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதி கரித்து வருகின்றன. பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த மதுக் கடையை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட் டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.