உயர் மின்னழுத்த கம்பத்தை அகற்றக் கோரிக்கை
13 Dec 2025, 5:13 pm
<p><strong>உயர் மின்னழுத்த கம்பத்தை அகற்றக் கோரிக்கை </strong></p>
<p>பாபநாசம், டிச.13- தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே, கரம்பத்தூரில் முல்லை வனம் என்ற பெயரில் வீட்டுமனைகள் விற்பனைக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் செல்லும் வாய்க்கால் வழியாக கடந்த காலங்களில் கரம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், விவசாய பணிக்காக வாய்க்காலின் கரையில் நடந்து சென்று வந்தனர். இந்நிலையில் இந்த வாய்க்காலின், கரையில் உயர் மின்னழுத்த கம்பம் அமைக்கப்பட்டு, நடந்து செல்லும் பாதை தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வயலுக்குச் செல்ல முடியாமலும், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமலும் அவதியுற்று வருகின்றனர். உயர் மின்னழுத்த கம்பத்தை உடனே அகற்றவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை முழுமையாக அளவீடு செய்யக் கோரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிச.18 ஆம் தேதி கரம்பத்தூரில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
