முந்தய பக்கம்

மதுக்கடைகளை இடமாற்றக் கோரிக்கை

25 Nov 2025, 3:29 pm
மதுக்கடைகளை இடமாற்றக் கோரிக்கை
<p><strong>மதுக்கடைகளை இடமாற்றக் கோரிக்கை</strong></p> <p>நாமக்கல், நவ.25- அரசு மதுபான கடைகளை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதிகாரியிடம் மனு &nbsp;அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி எருமப் பட்டியில் ஐந்து ரோடு, பழநி ஆகிய இரண்டு இடங்க ளில், அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை கள் இயங்குவதால் பொதுமக்கள், பெண்கள், மாணவர்க ளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்ச னையும், பெண்களுக்கு பாதுகாப்பு நிலையும் ஏற்பட்டு வரு கிறது. எனவே இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத இடத்தில் மாற்று இடத் திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் எருமப்பட்டி நகரம் முழுவதும் இயங்கி வரும் சட்டவிரோத சந்து கடைகளை தடை செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் அதிகாரிகளிடம் மனு வழங்கும் நிகழ்வு செவ்வாயன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சேந்தமங்கலம் வட்டாட்சி யர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், நாமக்கல் மாவட்ட &nbsp;காவல் கண்காணிப்பாளர், என அனைத்து அரசு அதிகாரிக ளுக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. இதில் ஒன்றியத் தலைவர் மு.து.செல்வ ராஜ், கிளைச் செயலாளர்கள் சத்யா, சிவசங்கர், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram