முதலாம் மண்டல பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க கோரிக்கை
3 Dec 2025, 2:59 pm
<p><strong>முதலாம் மண்டல பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க கோரிக்கை</strong></p>
<p>உடுமலை, டிச.3- திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி முதலாம் மண்டல பாசனத்திற்கு ஜனவரி மாதத்திற்கு முன்பே தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பிஏபி பாசன திட்டத் தில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியப் பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தேவையான தண்ணீர் திறப்பு குறித்து விவசாயி கள் அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நீர்வளத்துறை, கோவை மண்டலம் மற்றும் திட்டக்குழு தலைவர், பகிர்மா னக் குழு தலைவர்கள் பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணை யிலிருந்து 4 ஆம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு உரிய இடை வெளியில் 135 நாட்களில் ஐந்து சுற்று தண்ணீர் விடுவதற்கான அரசாணை பெறப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலை யில் நான்காம் மண்டல பாசன காலம் இம்மாதம் 9 ஆம் தேதி யோடு முடிகிறது. மேலும் முதலாம் மண்டல பாசனத்திற்கு வழக்கமாக ஜனவரி மாதம் ஆரம்பத்தில் அதாவது பொங்கல் பண்டி கைக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது காண்டூர் கால்வாயில் சில பகுதிகள், பரம்பிக்குளம் பிரதான கால்வா யில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொண்ட பின்னர் ஜன வரி மாதம் மூன்றாவது வாரத்தில் தான் முதலாம் மண்ட லத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிய வரு கிறது. ஆனால் நான்காம் மண்டல பாசன காலமான 135 நாட்க ளுக்குள் தண்ணீர் வழங்கும் சுற்றுக்களை முழுமையாக முடிவு பெறச் செய்த பின்னரே அடுத்த மண்டலத்திற்கான தண் ணீர் திறப்பை திட்டக்குழுவும் நீர்வளத்துறை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். மேலும் முதலாம் மண்டல பாசன காலம் என்பது கடுமையான வெயில் காலத்தில் வருவதால், பொங்கலுக்கு முன்பே தண்ணீர் கொடுத்தால் தான் முதலாம் மண்டல விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, திட்டக்குழு தலைவர் மற்றும் பகிர்மானக் குழு தலை வர்கள் உடனடியாக நீர் வளத்துறை அதிகாரிகளோடு கூட்டம் நடத்தி ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு முன்னதாகவே முத லாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான கருத்து ருவை அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.</p>
