முந்தய பக்கம்

பெரியகடை தெரு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டுகோள்

2 Dec 2025, 4:11 pm
பெரியகடை தெரு  போக்குவரத்து நெரிசலை  ஒழுங்குபடுத்த வேண்டுகோள்
<p><strong>பெரியகடை தெரு &nbsp;போக்குவரத்து நெரிசலை &nbsp;ஒழுங்குபடுத்த வேண்டுகோள்</strong></p> <p>மன்னார்குடி, டிச.2- &nbsp;திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகடை தெருவில் முற்பகல் 10 மணியிலிருந்து இரண்டு மணி வரை நெருக்கடியான நிலை ஏற்படுவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். &nbsp;மன்னார்குடி போக்குவரத்து காவலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள &nbsp;நிலையில், அன்றாடம் முழுநேரம் நிரந்தரமாக காவலர்களின் நியமனம் சாத்தியமில்லை என்றாலும், தினசரி முற்பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை, மீண்டும் மாலை 4 மணியிலிருந்து, இரவு 7 மணி வரை &nbsp; போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினாலே, போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். அப்போதுதான் மக்களின் நேரம், எரிபொருள் விரயம், சுற்றுச்சூழல் புகை &nbsp; மாசுபாட்டை தவிர்க்க முடியும். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram