முறைகேடாக வசூலித்த தொகையை மீட்கக் கோரிக்கை
15 Nov 2025, 4:09 pm
<p><strong>முறைகேடாக வசூலித்த தொகையை மீட்கக் கோரிக்கை</strong></p>
<p>கோவை, நவ.15- மதுக்கரை தர்மலிங்கேஷ்வரர் கோவில் முறைகேடுகளை விசாரித்து, அறங்காவ லரை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்ட தமிழக அரசுக்கு முன்னாள் நிர்வாகிகள் நன்றி தெரி வித்துள்ளனர். மேலும், முறைகேடாக வசூ லித்த தொகைகளை விசாரித்து மீட்க வேண் டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.125 கோடி நிலங் கள் இருப்பதை இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் மறைத்ததோடு, பொதுமக்களிடம் வசூலித்த தொகைகள் குறித்தான விவரங்களை கொடுக்கவில்லை என அக்கோவிலின் முன் னாள் நிர்வாகிகள் புகாரளித்தனர். அதன டிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதி காரிகள் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதன்பின் கோவிலின் நிரந்தர அறங்காவலராக இருந்த கிருஷ்ண சாமி என்பவரை அந்த பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன் னாள் நிர்வாகி சி.கே.கண்ணன், பழமை யான தர்மலிங்கேசுவரர் கோவில் சுமார் 50 ஆண்டுகளாக இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கு முன் நிரந்தர அறங்காவலராக இருந்த கிருஷ்ணசாமி, கோவிலில் வரவு செலவு களை பார்த்து கொடுக்கும் படி கூறினார். அப் போது அவர்கள் முறைப்படி எந்த கணக்கை யும் பராமரிக்கவில்லை என தெரியவந்தது. நான் பொறுப்பு ஏற்றபோது மட்டும் ரூ.90 லட்சம் வருவாய் வந்தது. இதனை இந்து சமய அறநிலையத்துறையிடம் கணக்கு காட்டி ஒப்படை வேண்டும் கூறிய போது, வேண்டாம் ஒவ்வொரு ஆண்டு கணக்கு களை கொடுப்பது இல்லை என கூறிய தோடு அளயறங்காவலாராக இருந்த திரு மூர்த்தி என்பவர் என்னை மிரட்டினார். இத னால் நான் மற்றும் சிவராஜ் ஆகியோர் பொறுப்பில் இருந்து வெளியேறி விட் டோம். மேலும், நாங்கள் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட் டது. மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 5 ஆய்வாளர்கள் நியமித்து இந்து அறநிலையத்துறை விசாரணை மேற் கொண்டது. அப்போது 29 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டது. மேலும் அவரை தற்காலிகமாக நீக்க இரண்டு ஆண்டுகள் விசாரித்தார்கள். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. பொது மக்களிடம் பணம் வசூல் செய்தது. இந்து அற நிலையத்துறையில் அனுமதி பெறாமல் 27 மண்டபங்கள் கட்டியது. உண்டியல் வசூல், திருமண மண்டப வசூல் என எதற்கு முறை யான விளக்கம் அளிக்காத நிலையில் கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக அறங்காவ லர் பொறுப்பில் இருந்து நீக்கி இந்து சமய அறநிலையத்துறையின்னர் உத்தரவிட்டுள் ளனர். உரிய விசாரனை நடத்தி உத்தர விட்ட அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள் கிறோம். உடனடியாக பொதுமக்களிடமும், எங்களிடமும் வசூல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1.5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.79 லட்சம் வந் துள்ளது கணக்கில் உள்ளது. எங்களிடம் வசூ லித்த பணத்திற்கு ரசீது வேண்டும், இந்து அறநிலையத்துறைக்கு முறையான கணக்கை கொடுக்க வேண்டும், என்றார்.</p>
