தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில் குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை

2 Dec 2025, 4:11 pm
நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில் குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை
<p><strong>நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில் குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை</strong></p> <p>உடுமலை, டிச.2- உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் இங்குள்ள அர சுக்கு சொந்தமான குளம் மற்றும் குட்டை களுக்கு திருமூர்த்தி மற்றும் அமராவதி &nbsp;அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை அருகே உள்ள அமரா வதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் &nbsp;கரூர் மாவட்டத்தில் &nbsp;54 ஆயிரத்து 637 ஏக் கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வரு கின்றன. அத்துடன், ஆற்றின் வழியோர &nbsp;கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் &nbsp;உள்ளது. அதே போல் திருமூர்த்தி அணையின் மூலம் திருப்பூர், கோவை மாவட்டத்தில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் &nbsp;விளைநிலங்களும், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா மக்களின் குடி நீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகி றது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் &nbsp;இரண்டு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகு திகளில் பெய்த மழையால் அணைக ளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள் ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாலும், விவ சாய தேவைகளுக்கு தண்ணீர் தேவை &nbsp;இல்லாத நிலையில், அணைகளில் இருந்து குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். டிச.2 ஆம் &nbsp;தேதி காலை நிலவரப்படி, அமராவதி அணைக்கு நீர்வரத்து 873 கன அடியாக வும், அணையின் நீர்மட்டம் 90 அடியில் &nbsp;77.40 அடி தண்ணீர் உள்ளது. அதே போல் திருமூர்த்தி அணைக்கு &nbsp;882 கன &nbsp;அடி நீர்வரத்து மொத்தமுள்ள 60 அடி யில் 54.23 கன தண்ணீர் அணையில் உள் ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், இந்த இரண்டு தாலு காவிலும் கடந்த மாதம் முதல் சரியான &nbsp;இடைவெளியில் நல்ல மழை பெய்து &nbsp;வருவதால் அணைகளில் தண்ணீர் போதிய இருப்பு உள்ளது. அணைக்கு &nbsp;நீர்வரத்தும் நல்ல முறையில் உள்ள தால், தண்ணீரை முறையாக &nbsp;பயன்படுத் தும் வகையில் இப்பகுதியில் இருக்கும் குளம் மற்றும் குட்டைகளுக்குத் தண் ணீர் விட வேண்டும். இதனால் அடுத்த &nbsp;ஓராண்டுக்கு மேல் நிலத்தடி நீர் மட்டம் &nbsp;உயரும். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.