கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் பொங்கல் தொகுப்புடன் வழங்க கோரிக்கை
13 Dec 2025, 5:13 pm
<p><strong>கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் பொங்கல் தொகுப்புடன் வழங்க கோரிக்கை</strong></p>
<p>அவிநாசி, டிச.13 - அவிநாசியில் பல்வேறு பகுதிகளில் சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க அவிநாசி ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் கருணைபாளை யம், கவுண்டம்பாளையம், பொன் ராமபுரம் உள்ளிட்ட பகுதி களில் இந்த தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், நலவாரிய பயன்களை தொழிலாளர்களுக்கு தாமதமின்றி உடனே வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயி ரம் கட்டிட கட்டுமானத் தொழிலாளிக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகை ரூ.1200 இருந்து ரூ.3000 உயர்த்தி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அமல்படுத்திய, தொழி லாளர் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்திப் பேசினார். இதில், அமைப்பின் ஒன்றிய துணைத்தலைவர்கள் ராஜன், ராஜ், ஒன்றியப் பொருளாளர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர் பாரூக், முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
