ஆக்கூரில் சாலை, மின்விளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை
10 Dec 2025, 4:08 pm
<p><strong>ஆக்கூரில் சாலை, மின்விளக்கு வசதி செய்து தரக் கோரிக்கை</strong></p>
<p>மயிலாடுதுறை, டிச.10 - மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத் தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிளைச் செயலாளர் சுதாமன் தலைமை வகித்தார். கிளைச் செயலா ளர்கள் ராமமூர்த்தி, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சிவ சுப்ரமணியன், தட்சிணாமூர்த்தி, ஜோதி, எம்.எஸ்.ராஜேந்திரன், லெனின்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சின்ன பூந்தாழை 11/2 கப்பி சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும். பூந்தாழை மேலதெரு, பட்டினதெரு, இடுகாடு சாலை மற்றும் இடுகாட்டை சீரமைக்க வேண்டும். பூந்தாழை கம்பன்நகர் மன் சாலையை சிமெண்ட் சாலையாகவும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண் டும். கீழத்தெரு இடுகாடு சாலையை சமன்செய்து கருவேல மரங்களையும், உடையார்கோவில்பத்து இடுகாடு சாலையை சீர்செய்து கருவேல மரங்களையும் வேருடன் அகற்ற வேண்டும். அ.புத்தூர் சாலையில் இருந்து பூந்தாழை செல்லும் சாலை யில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். நான்கு வழிச் சாலை அருகே அமைந்துள்ள தெருக்களுக்கு பெயர் பலகை மற்றும் சர்வீஸ் சாலை அமைத்துத் தர வேண்டும். ஊராட்சி களுக்கு போதுமான நிதியை ஒதுக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவ லரை தொடர்பு கொண்டு ஒன்றியச் செய லாளர் மார்க்ஸ் பேசிய போது, “போராட் டத்தை அலட்சியப்படுத்தும் நோக்கில் பேசியதை கண்டித்து மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
